Loading . . .




ஆசிய பாரா விளையாடில் இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 18 பதக்கங்கள்

The Forecast 2 years ago ஸ்கேட்டிங்

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் 2-ம் நாளில் இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் போட்டியின்போது இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. இந்நிலையில் நேற்றுநடைபெற்ற 2-ம் நாள் போட்டியின்போது 4 தங்கம் உட்பட 18 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

இதனிடையே, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியவீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து வருவதற்கு பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “2-ம் நாள் போட்டியின்போது இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் உள்ளிட்ட 4 பேர் தங்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் இந்தியாவை பெருமை அடையச் செய்துள்ளீர்கள்” என்றார்.

0 Comments

Post your comment here

ஸ்கேட்டிங் Relateted News