
தெலுங்கானா சுதந்திரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மூன்றாவது சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. 2014 மற்றும் 2018ல் நடந்த தெலுங்கானா தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்வதன் மூலம் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவை.இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பா.ஜ., மற்றும் ஆளும் பாரத ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு இன்று கடிதம் அனுப்பினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஜி கிஷன் ரெட்டிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், "கனத்த இதயத்துடன், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக் காலத்தில் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என கூறியுள்ளார்.பாஜகவில் இருந்து விலகிய விவேக் வெங்கடசாமி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
0 Comments