
கே.எஸ் அழகிரி
வரும் பாராளுமன்ற தேர்தலில், தென் மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், வரும் 4ம் தேதி, தமிழக காங்கிரஸ் சார்பில், துாத்துக்குடியில் பூத் கமிட்டி பயிற்சி மாநாடு நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே மயிலாடுதுறை, திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் , திண்டுக்கல், ,விருதுநகர் கன்னியாகுமரி திருநெல்வேலிஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது..வரும் பாராளுமன்ற தேர்தலில், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது.
இந்நிலையில், துாத்துக்குடி லோக்சபா தொகுதி பூத் கமிட்டி பயிற்சி மாநாடு, தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி தலைமையில், வரும் 4ம் தேதி, திருச்செந்துார் ரோடு, காமராஜ் கல்லுாரி அருகில், மாணிக்கம் மஹாலில் நடைபெற இருக்கிறது.
0 Comments