Loading . . .




70 ஆண்டுகால காங்கிரஸின் முயற்சி இல்லாமல் மோடியின் பிரதமராக உயர்வு சாத்தியமில்லை : கார்கே

The Forecast 2 years ago காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருவதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாகவும், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வலியுறுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.  சத்தீஸ்கரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய கார்கே, காங்கிரஸ் எதுவும் செய்யாமல் இருந்திருந்தால், மோடியும் அவரது சகாக்களும் பிரதமராகி இருக்க முடியாது என்றும், அமித் ஷா உள்துறை அமைச்சராக ஆகியிருக்க முடியும் என்றும் வாதிட்டார்.  இந்திய அரசியலமைப்பை காங்கிரசு பாதுகாத்தது, அது போன்ற பதவிகளில் பதவிகளை வகிக்க அனுமதித்தது என்று அவர் வாதிட்டார்.  சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது..

கடந்த 5 ஆண்டுகளாக பூபேஷ் பெகல் தலைமையிலான அரசு சத்தீஸ்கரில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. எதையும் செய்யாமல் நாங்கள் ஒட்டு கேட்க வரவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை கொண்டு வந்தோம். உணவு பாதுகாப்புக்கான சட்டத்தைக் கொண்டு வந்தோம். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக அரசுப் பள்ளிகளைக் கொண்டு வந்தோம். தற்போது நீங்கள் பார்க்கும் எதுவும் பிரதமர் மோடியால் வந்தது அல்ல.

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த நரேந்திர மோடியும், அமித் ஷாவும் பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயன்றனர். கர்நாடகாவிலும் அப்படித்தான் செய்தனர். ஆனால், அம்மாநிலத்தில் இருந்த 40% ஊழல் பாஜக அரசை நாங்கள் அகற்றினோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்தியில் உள்ள மோடி அரசு துன்புறுத்துகிறது. மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை முறையாக விடுவிப்பது கிடையாது. மோடி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது அவரது பணம் கிடையாது; மக்களின் வரிப்பணம்; அவர்களின் உரிமைப் பணம்.

நாட்டின் மிகப் பெரிய தொழிற்சாலைகள் பலவற்றை தொடங்கிய கட்சி காங்கிரஸ். ஆனால், பிரதமர் மோடியோ செல்லும் இடங்களில் எல்லம் மிகப் பெரிய பொய்களின் தொழிற்சாலையை திறந்து வைத்து வருகிறார். அவர் மக்களுக்கு நெருக்கமாகச் செல்வது கிடையாது. தூரத்தில் இருந்துதான் அவரை பார்க்க முடியும். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் அப்படி அல்ல. மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். உங்களுக்காக உழைப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று கார்கே உரை நிகழ்த்தினார்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News