வியட்நாம் அரசாங்கம் சுற்றுலா வரும் இந்தியர்கள் விசா இல்லாமல் நுழைய அனுமதி வழங்கியுள்ளது
The Forecast 2 years ago உலக செய்திகள்
வியட்நாம்
இலங்கை மற்றும் தாய்லாந்தைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் மூன்றாவது நாடாக வியட்நாம் மாற உள்ளது. மார்ச் 31, 2024 வரை இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாத விசா இல்லாத காலத்தை இலங்கை அறிவித்துள்ளது.
தாய்லாந்தின் சுற்றுலாத் துறையும் நவம்பர் 10 முதல் நாட்டிற்கு வரும் இந்தியர்கள் விசா இல்லாமல் நுழையலாம் , மேலும், மே 10, 2024 வரை, விசா இல்லாமல் 30 நாட்கள் தங்கலாம் என்று அறிவித்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் போல் விசா இல்லாமல் நுழைய இந்தியர்களுக்கும் அனுமதிக்கிறது அளிக்கபட்டுள்ளது.
0 Comments