6 நாட்டு குடிமக்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி
The Forecast 2 years ago உலக செய்திகள்
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் குடிமக்களுக்கு டிசம்பர் 1 முதல் சீனா விசா இல்லாத அனுமதியை வழங்கியுள்ளது. இந்த அனுமதி ஒரு வருட காலம் வரை இருக்கும். மேலும் விசா இல்லாதவர்கள் சீனாவில் 15 நாட்கள் வரை தங்கலாம். . இந்த நடவடிக்கையானது சீனாவின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் மேலும் சர்வதேச பார்வையாளர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சர்வதேச பார்வையாளர்கள் சீனாவுக்கு வருகை தந்தனர்.
0 Comments