Loading . . .




அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் : இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

The Forecast 2 years ago மதுரை

இந்தியாவிலேயே முதல் முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அலங்காநல்லூர் அருகே ரூ.44 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க உள்ளது. இந்த மைதான கட்டுமானப்பணியை டிசம்பரில் முடிக்க, இறுதிக்கட்டப் பணிகள் மிக தீவிரமாக நடக்கிறது.

தமிழகத்தில், மதுரை மட்டுமல்லாது திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, திருப்பூர் போன்ற பல மாவட்டங்களில் நடக்கிறது. ஆனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலக பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகளை காண, ‘கிரிக்கெட்’ போட்டியை போன்று உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக பார்வையாளர்களும் மதுரையில் திரள்வார்கள். 

இம் மைதானத்தில், தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன.

  • 16,921 சதுர அடியில் அமைக்கப்படும் முதல் தளத்தில் விஐபிகள் அமரும் அறை மற்றும் அவர்கள் தங்கும் அறைகள், உணவு வைப்பு அறைகள் இடம்பெறுகிறது.
  • 9,020 சதுர அடியில் அமைக்கப்படும் இரண்டாம் தளத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைப்பறையும், 
  • 1,140 சதுர அடியில் அமைக்கப்படும் மூன்றாம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்படுகின்றன.

மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 50,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 50,000 லிட்டர் தரைத்தள நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர முந்தைய நாளே வரும் காளைகள் உரிமையாளர்கள் ஓய்விடம், காளைகள் ஓய்விடம், சுகாதார கழிப்பறை வசதிகள், கால்நடை மருந்தகம், மாடுபிடி வீரர்கள் சிகிச்சை மருத்துவமனை, வாடிவாசல் செல்லும் காளைகள் பரிசோதனை கூடம் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன. ஒரு கிரிக்கெட் மைதானத்தில் என்னென்ன வசதிகள் இருக்குமோ! அத்தனை வசதிகளும் இந்த மைதானத்தில் ஏற்படுத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு மைதான வளாகத்தில் அருங்காட்சியகம் அமைகிறது குறிப்பிடத்தக்கது 

0 Comments

Post your comment here

மதுரை Relateted News