திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது சிறப்பாகப் பணியாற்றிய விற்பனைப் பிரிவு அலுவலர்களுக்கு அமைச்சர் த. மனோ தங்கராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்
The Forecast 2 years ago பால் வளத்துறை
பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் மற்றும் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் இ.ஆ.ப.,
பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று ஆவின் விற்பனைப் பிரிவு அலுவலர்களுடன் விற்பனையை மேம்படுத்துதல் மற்றும் தரம் உறுதிப்படுத்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது சிறப்பாகப் பணியாற்றிய விற்பனைப் பிரிவு அலுவலர்களுக்கு (திருநெல்வேலி – சஹாய ஷீபா அலெக்ஸ் (மேலாளர்), தூத்துக்குடி – சரவணபாண்டியன் (துணை மேலாளர்) ஆகியோருக்கு பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
இவ்வாய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் இ.ஆ.ப., விற்பனைப் பிரிவில் மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த அலுவலர்கள், தலைமையிடத்து உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
0 Comments