குடியரசு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை
S. Shanmuganathan 11 months ago திருநெல்வேலி
குடியரசு தின விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். நாடு முழுவதும் குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை (ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. திருநெல்வேலியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விழாவில் இடம்பெறும் காவல் துறையின் அணிவகுப்புக்கான ஒத்திகை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆண், பெண் போலீஸாா் தனித்தனியாக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
மேலும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments