செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்
The Forecast 2 years ago செங்கல்பட்டு
அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு , வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தாம்பரம் காவல் ஆணையாளர்/கூடுதல் தலைமை இயக்குநர் முனைவர்.அ.அமல்ராஜ், இ.கா.ப., காவல் துணை ஆணையர்கள் பவன் குமார், இ.கா.ப., மற்றும் அரசு அலுவலர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை" தமிழ்நாடு முதலமைச்சர் 30.12.2023 அன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில்" ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தாம்பரம் காவல் ஆணையாளர்/கூடுதல் தலைமை இயக்குநர் முனைவர்.அ.அமல்ராஜ், இ.கா.ப., காவல் துணை ஆணையர்கள் பவன் குமார், இ.கா.ப., (தாம்பரம் சட்டம் & ஒழுங்கு), கௌதம் கோயல், இ.கா.ப., (பள்ளிக்கரனை சட்டம் & ஒழுங்கு), ந.குமார், (தாம்பரம் போக்குவரத்து), மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், தலைமை நிர்வாக அலுவலர் (ம) மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் உதயா கருணாகரன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் வி.எஸ்.ஆராமுதன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி கார்த்திக், சி.எம்.டி.ஏ. செயற்பொறியாளர்கள் ராஜன்பாபு, பாலமுருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments