அரசு நிலங்களை ஆக்கிரமித்து தேர்தல் அலுவலகங்களை திறக்க கூடாது அரசியல் கட்சிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் , சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அறிவுறுத்தியுள்ளார்
The Forecast 2 years ago டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.
கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் , சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.,
சென்னையில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் , சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டதில் அவர் பேசியதாவது, தற்காலிக பிரச்சார அலுவலகங்களை அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்தோ, வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர்தொலைவுக்குள்ளோ அமைக்கக்கூடாது. தற்காலிக அலுவலகங்களில் ஒரே ஒரு கட்சிக் கொடியை, ஒரு கட்சி பதாகை போட்டோ 4 அடி அகலம், 8 நீளத்தில் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து தேர்தல் அலுவலகங்களை திறக்க கூடாது. பிற அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது. பிற கட்சிக் கூட்டங்களில் தனது கட்சி ஆதரவாளர்களைக் கொண்டு கேள்வி எழுப்புவதன் மூலமும், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்வதன் மூலமும் தொல்லை கொடுக்கக்கூடாது. மேலும் 85 வயதுக்கு மேற்பட்டோர் சென்னையில் 65 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் எளிதில் வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனவும் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆர்.லலிதா இ.ஆ.ப., வி.ஜெயசந்திர பானு ரெட்டி இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., ஷரண்யா அறி இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments