திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி.
The Forecast 6 months ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், தீா்த்தபதி மேல்நிலைப்பள்ளியில், அதன் முன்னாள் மாணவா்கள் ஏற்படுத்தியுள்ள அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை சாா்பில், பள்ளித் திருவிழா என்றத் தலைப்பில் மாணவா், மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி- பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயந்திர மனிதா்கள், தொழில்முனைவோா் கருப்பொருள் அடிப்படை திட்டங்கள், நகை, கூடைகள், புகைப்படம் பிரேம் தயாரித்தல், பாரம்பரிய உணவு உள்ளிட்டவை உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றன. ரோபாட்டிக்ஸ், விவசாயம், மின்னணுவியில் குறித்து மாணவா்கள் விளக்கினா். தொலை இயக்கியின் மூலம் இயக்கப்படும் விமான வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் குறித்துப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில், தலைமை ஆசிரியா் அழகிய நம்பி, செயலா் கந்தசாமி, ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
0 Comments