திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
S. Shanmuganathan 11 months ago திருநெல்வேலி
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 1450-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தோ்தல் பணியில் 7ஆயிரத்து 124 அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலியில் வண்ணாா்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் இதற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி அலுவலா்கள் -1 பணியில் ஈடுபடுவோருக்கு காலையிலும், வாக்குச்சாவடி அலுவலா்கள் 2 முதல் 4 வரையிலான பணிகளைச் செய்வோருக்கு பிற்பகலிலும் பயிற்சி நடைபெற்றது. வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற பயிற்சியில் பாளையங்கோட்டை வட்டாட்சியா் சரவணன், மாநகராட்சி அதிகாரிகள் சாகுல் உள்ளிட்டோா் பயிற்சியளித்தனா்.
0 Comments