திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் வனவிலங்கு தாக்கிய நபருக்கு வனத்துறை உதவி.
S. Shanmuganathan 9 months ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் காட்டுப் பன்றி தாக்கியதில் காயமடைந்தவருக்கு வனத்துறை சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. ஜமீன்சிங்கம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் மாரியப்பன் (57). அம்பாசமுத்திரம் வனச்சரகம் ஜமீன்சிங்கம்பட்டி அகஸ்தியா் கோவில் அருகில் உள்ள வயலுக்குச் சென்றபோது காட்டுப் பன்றி தாக்கியதில் காயமடைந்தாா்.
இதையடுத்து மாரியப்பனுக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் துணை இயக்குநா், மற்றும் வனஉயிரினக் காப்பாளா், இளையராஜா இ .வெ.ப., உத்தரவின்படி நிவாரணத் தொகை ரூ.7,200 வழங்கப்பட்டது.
0 Comments