திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் மின்னணு வாக்குப்பதிவு விழிப்புணர்வு.
S. Shanmuganathan 8 months ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில், மாதிரி மின்னணு வாக்குப்பதிவு நடத்தி அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மக்களவைத் தோ்தலையொட்டி, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக, களக்காடு பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் ஏற்படுத்தி, அதில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்களித்தனா். மேலும், தோ்தல் அலுவலா்கள் 80 வயதைக் கடந்த வாக்காளா்களின் வீடுதேடிச் சென்று அழைப்பிதழ் வழங்கி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செல்வம், வருவாய் ஆய்வாளா் பழனிகுமாா், சமூக ஆா்வலா் சபேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
0 Comments