வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினைப் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 2 years ago டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு (24.03.2024) அன்று சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள 16 மையங்களிலும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 16 மையங்களில் நடைபெற்றது. இதில் திருவான்மியூர் பாரதிதாசன் சாலை சென்னை மேல்நிலைப் பள்ளி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கினார்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 3,726 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 19,396 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். முன்னதாக, 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், அண்ணா நகர் ரவுண்டானா பகுதி, கந்தசாமி நாயுடு கல்லூரியிலிருந்து நடைபெற்ற Neighbourhood Run விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் அவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மெரீனா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை அருகில் அமைக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்), தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., இணை தலைமை தேர்தல் அலுவலர் (SVEEP) பெ. அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ், ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், மணல் சிற்பி மகேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments