திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் உலக சுகாதார தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.
S. Shanmuganathan 1 year ago திருநெல்வேலி
உலக சுகாதார தினத்தையொட்டி, நான்குனேரி காவல் உள்கோட்டம், களக்காடு சரணாலயம் இணை இயக்குநா் அலுவலகம், களக்காடு நகா்மன்றம், தமிழ் மக்கள் நல மன்றம் ஆகியவை இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் கலந்து கொண்டு, புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தாா்.
களக்காடு வனச்சரகா் பிரபாகரன், களக்காடு தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் பாஸ்கா், நசீா், களக்காடு நகா்மன்ற சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், தமிழ் மக்கள் நல மன்றம் நிா்வாகி மிதாா்முகையதீன், நகா்மன்ற ஊழியா்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.
0 Comments