Loading . . .




தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

The Forecast 2 years ago டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.

நேற்று, பெசன்ட் நகர் கடற்கரையில், தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற‌ வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ( Vote & Greet) மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில், தேர்தலில் 100% வாக்களிப்போம் என்கிற கையழுத்துப் பலகையில் கையெழுத்திடுதல், மாதிரி வாக்குப்பதிவு, வாக்காளர் தன் புகைப்படம் எடுத்தல், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழிப்புணராவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து, சென்னை மெரீனா கடற்கரை நேதாஜி சிலை அருகில், வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை (Voters awareness Street play) மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் அவர்கள் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

இந்நிகழ்வுகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எம்.பி.அமித், இ.ஆ.ப., (தென் சென்னை),  கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்திய சென்னை), போதி சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் ஆனந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. Relateted News