Loading . . .




மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்

The Forecast 2 weeks ago சேலம்

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து, சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, எடப்பாடி மற்றும் ஓமலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள இருப்பு அறையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நாள்தோறும் 2 முறை இம்மையங்கள் அனைத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் ஆய்வு செய்யப்பட்டது குறித்து சான்றொப்பம் இட்டு வருவதுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாடுகள். தடையில்லா மின்சாரம் மற்றும் சுழற்சி முறையில்  துப்பாக்கி ஏந்திய துணை இராணுவத்தினர், காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் நேற்றய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் - சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் உள்ளிட்ட இம்மையத்தின் அனைத்து பகுதிகளும் சிசிடிவி கண்காணிப்புக் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனை சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இம்மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இக்கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் - 4 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் குடிநீர் வசதி உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

0 Comments

Post your comment here

சேலம் Relateted News

Latest News