திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்
S. Shanmuganathan 7 months ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனா். களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் கோடை விடுமுறைக் காலம் தொடங்கிவிட்டதால், நீா்நிலைகளைத் தேடி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனா். தற்போது களக்காடு தலையணையில் நீா்வரத்து குறைந்த போதிலும், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தடுப்பணையைத் தாண்டி வந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
0 Comments