திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு புதிதாக திருத்தம் செய்த முப்பெரும் சட்டங்கள் குறித்து சிறப்பு பயிற்சி வகுப்பு.
S. Shanmuganathan 6 months ago திருநெல்வேலி
மத்திய அரசால் புதிதாக திருத்தம் செய்த முப்பெரும் சட்டங்கள் 01.07.2024ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா(IPC to BNS), பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (CrPC to BNSS) மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (IEA to BSA) ஆகிய 3 முக்கிய சட்டங்கள் குறித்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு ஒவ்வொரு பிரிவாக பிரித்து அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் 5 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதில் 13.05.2024 அன்று முதல் இன்று வரை முதல் பிரிவினருக்கு 5 நாட்களுக்கு புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சட்ட விளக்க வகுப்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் இ.கா.ப., உத்தரவின் படி, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
பயிற்சி வகுப்பில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பாலச்சந்திரன் தலைமையில், (TIN CITY RANGE IN-SERVICE) துணை காவல் கண்காணிப்பாளர், தங்ககிருஷ்ணன் , துணை காவல் கண்காணிப்பாளர் (SJHR) ஜெயராஜ், துணை காவல் கண்காணிப்பாளர், (PEW) மீனாட்சி நாதன், ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments