Loading . . .




சென்னை மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் மற்றும் இரயில்வே சுரங்கப்பாதை பாலப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டார்

The Forecast 2 years ago டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143 மற்றும் 144, பூந்தமல்லி பிரதான சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ.42.71 கோடி மதிப்பில் 245 மீ. நீளம் மற்றும் 20.70 மீ. அகலத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், பூந்தமல்லி பிரதான சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி மதிப்பில் 273 மீ. நீளம் மற்றும் 12 மீ. அகலத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட வார்டு-45 மற்றும் 71, கணேசபுரம் இரயில்வே சுரங்கப்பாதையின் மேல் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ்,ரூ.142 கோடி மதிப்பில் 678 மீ. நீளம் மற்றும் 15.20 மீ. அகலத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இப்பாலங்களின் பணிகளை உரிய தொழில்நுட்ப வழிமுறைகளின்படி தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அறிவுறுத்தினார்.  மேலும் , இந்த ஆய்வுகளின்போது வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மண்டல அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. Relateted News