திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் இ.ஆ.ப., ஆய்வு
S. Shanmuganathan 6 months ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பில் கொக்கிரகுளத்தில் தாமிரவருணி கரையை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டஆட்சியா் அலுவலகத்தின் எதிரே உள்ள பகுதியில் கரை முழுவதும் கான்கிரீட் அமைக்கப்பட்டு, கூடுதலாக படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இருக்கை வசதிகள், மின்விளக்கு வசதிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப., செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்கவும், வெள்ளத்தால் சேதம் ஏற்படாத வகையில் கட்டட வடிவமைப்புகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.
0 Comments