உலகை உலுக்கிய வாசகங்கள் எனும் நூலிலிருந்து முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அவர்களின் முத்தான வரிகள்
The Forecast 5 months ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
உண்மையே வெல்லும்!
மக்கள் உன்னிப்பான ஏமாளிகள்;
நுணுக்கமான அப்பாவிகள்;
சாமர்த்தியமான வெகுளிகள்;
அவர்களை சின்ன பொய்களால் ஏமாற்ற முடியாது,
பெரிய பொய்களால் எளிதில் கவிழ்த்து விடலாம்.
அவர்கள் குண்டூசி பற்றி தெளிவாக இருப்பார்கள்,
குண்டு பூசணி விஷயத்தில் தான் கண்ணை மூடிக்கொள்வார்கள்.
உண்மையை விட பொய் அதிகம் வசீகரிக்கிறது!
உண்மை கால்நடையாய் போகும் போது, பொய் விமானத்தின் முன்னிருக்கையில் இடம் பிடிக்கிறது.
பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மெய் ஆக்குவதே - உலக யுக்தி , கலக புத்தி.
இந்நாட்களில், நம் நம்பிக்கை நூலிழையை விட மெல்லியதாக இருக்கிறதே,
என்ன செய்வது?
தனி ஒருவன் சொன்னால் பொய்,
கூட்டம் சொன்னால் வதந்தி,
ஊடகம் சொன்னால் செய்தி,
சாமியார் சொன்னால் குறி,
தொண்டன் சொன்னால் புகழ்ச்சி,
புள்ளிகள் சொன்னால் புள்ளி விவரம்.
இன்றைய உலகிற்கு இவ்வரிகள் நிதர்சனம் நிறைந்த உண்மையே..!
எத்தனை உண்மை..!!!
படித்ததில் பிடித்தது - ஆர். ஜோ. ஜெனின் தானியேல்
இம்முத்தான வரிகள் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்களின் "உலகை உலுக்கிய வாசகங்கள்" எனும் நூலிலிருந்து.
0 Comments