Loading . . .




கோவை வன மரபியல் நிறுவன வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பிற்க்குமேல் படித்து  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

The Forecast 1 year ago வேலையும் - வாய்ப்பும்

கோவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் நிறுவனத்தில் 35 பணியிடங்கள் உள்ளன; 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணலாம் என மத்திய அரசு அறிக்கை விடுத்துள்ளது!

தமிழ்நாட்டின் கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 08.06.2024 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும், இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ifgtb.icfre.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

0 Comments

Post your comment here

வேலையும் - வாய்ப்பும் Relateted News