முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அவர்களின் உலகை உலுக்கிய வாசகங்கள் என்ற நூலில், "சிறந்த நிர்வாகம் எது?" என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பொன்னான வரிகள்
The Forecast 1 year ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
சிறந்த நிர்வாகம் எது?
" எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் மக்களின் மத்தியில் சென்றாலே, பாதித் துயரம் கரைந்துவிடும். அமைதியாக அவர்கள் குறைகளைக் கேட்டாலே மீதித்துயரம் மறைந்துவிடும்."
"சாய்ந்து கொள்ளும் தோள்களுக்காகவும், தாங்குகின்ற கரங்களுக்காகவுமே கண்ணீர் வடிக்கும் மக்கள் காத்திருக்கிறார்கள். அழுது முடிந்தவுடனேயே அவர்கள் இதயம் கனமற்று விடுகிறது. தலைமைப் பணி விரும்புகிறவர்கள் அடிமட்டத்தில் வாழ்ந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய வேதனை புரியும்."
முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அவர்களின் உலகை உலுக்கிய வாசகங்கள் என்ற நூலில், "சிறந்த நிர்வாகம் எது?" என்ற தலைப்பில் இந்த பொன்னான வரிகள் இடம் பெற்றுள்ளது,
இந்த வரிகளில், சிறந்த நிர்வாகம் எது? என்பதை பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம். அந்த வகையில் ஒரு நாட்டின் அரசாங்கமும் ஒரு நிர்வாகம் தான். மேல் குறிப்பிட்டுள்ள வரிகளைப் போல ஆட்சியில் உள்ளவர்கள் நாட்டின் எந்த இடத்தில் எவ்வாறான பிரச்சனைகள் நடத்தலும், எத்தனை பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மக்கள் மத்தியில் சென்று அவர்களிடம் " எங்கள் அரசு,உங்கள் அரசு " என்ற நம்பிக்கையை உருவாக்கும்பொழுது மக்கள் மனதில் இருக்கும் பெரும் துயரங்கள் அனைத்தும் கரைந்துவிடும். அவர்களிடம் சென்று அமைதியாக அவர்களின் குறைகளை கேட்டாலே மீதி துயரம் மறைந்துவிடும் என்பது உண்மை!
அவை முற்றிலும் உண்மை..!
மேலும் அரசாங்கம் மக்களின் துன்ப நேரங்களில் - மக்கள் சாய்ந்து கொள்ள உதவும் தோள்களாகவும், அவர்களை தாங்குகின்ற கரங்களாகவும் இருக்கும் பொழுது அவர்கள் வடிக்கும் கண்ணீர்கள் யாவும் மறைந்து விடும். கஷ்டங்கள் நிறைத்து பாரமாய் இருந்த மக்களின் இருதயம் கனமற்று விடும்.
அதுமட்டுமன்றி, உயர் பதவியில் அமர்ந்திருக்கும் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் தங்களை ஒரு நிமிடம் மக்களின் நிலைமையில் இருந்து யோசித்துப் பார்த்தார்கள் என்றால் மக்களுடைய வேதனைகள் புரியும், அடிமட்ட மக்களின் வாழ்க்கை நிலை தெறியும். அச்சிறு சிந்திப்பு அவர்களை சிறந்து மக்களுக்காக பணியாற்ற கற்றுக்கொடுக்கும், அவர்கள் மக்களுக்காக செய்து கொண்டிருக்கும் பணிகளை மேலும் செவ்வனே சீராய் செய்ய உதவும், உத்வேகப்படுத்தும்.
இக்கருத்துக்கள் அரசாங்கத்திற்கு மட்டுமின்றி சிறு , குறு மற்றும் பெரு நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், குடும்பங்கள் மட்டுமின்றி இரண்டு அல்லது மூன்று பேர் கூடும் அனைத்து இடங்களுக்கும் உதவும் பொதுவான கருத்தாக இப்பதிவு திகழ்கிறது.
0 Comments