மேட்டுப்பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதுபிக்கப்பட்ட ஆதரவற்றோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம் திறப்பு
The Forecast 8 months ago கோவை
மேட்டுப்பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதுபிக்கப்பட்ட ஆதரவற்றோர் மீட்பு. பராமரிப்பு மையத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை செயலாளர் நாகராஜன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கீத் குமார் ஜெயின், வருவாய் அலுவலர் டாக்டர். சர்மிளா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலக கட்டடத்தில் ஆதரவற்றோர் மீட்பு, பராமரிப்பு மையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் சாலையோரம் வசிக்கும் மன நலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோர் அடையாளம் கண்டு அவர்கள் மீட்கப்பட்டு இந்த மையத்திற்கு கொண்டு வரப்படுகின்றனர். பின் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு வழங்கப்படுகிறது.
கோவை மாவட்ட நிர்வாகம், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து, 'ஹெல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இந்த மையத்தை பராமரித்து வருகின்றனர். இந்த மையத்தில் 54 படுக்கை வசதிகள் இருந்த நிலையில், தற்போது 90 படுக்கை வசதிகள் கெ மையமாக புதுபிக்கப்பட்டுள்ளது. அரங்கு, மனநலம் பாதிப்பட்டோருக்கான பயிற்சி அறை போன்றவைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.புதுபிக்கப்பட்ட இந்த மையத்தை நேற்று தமிழக அரசின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை செயலாளர் நாகராஜன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கீத் குமார் ஜெயின், வருவாய் அலுவலர் டாக்டர். சர்மிளா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். மையத்தின் 3ம் ஆண்டின் விழாவில் கலந்து கொண்டனர் விழாவில், கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-
இங்கு எப்போது வந்தாலும் பராமரிப்பாளர்கள், செவிலியர்களை வியந்து பார்ப்பேன். அவர்களது பணி மிகவும் பாராட்டுக்குரியது. இந்த மையத்திற்கு தேவைப்படும் உதவிகளை மாவட்ட நீர்வரகம் தொடர்ந்து செய்து கொடுக்கும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களும் உதவ வேண்டும். நம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் மீட்பு, பராமரிப்பு மையம் பிற மாவட்டங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது. பல மாவட்டங்களில் இரவு நேர தங்கும் விடுதிகள் செயல்படாமல் உள்ளது. கோவை மாவட்டத்தில் 'ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வ தொண்டு நி உதவியுடன் இரவு நேர தங்கும் விடுத் சிறப்பாக செயல்படுகிறது, என்றார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை செயலாளர் நாகராஜன் பேசியதாவது:-
மனநலம் பாதிக்கப்பட்டு தங்களது வீடு எங்கு இருக்கு என தெரியாமல் அல்லது வீட்டில் இருந்து வெளியேற்றபட்டவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் சாலையில் சுற்றுவார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது இந்த மையம். இந்த மையம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள், என்றார்.
இந்த மையத்தில் தற்போது 55 பேர் தங்கியுள்ளனர். இங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு முதலில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மீட்கப்படுபவர்களை மையத்துக்கு கொண்டுவர பிரத்யேக வாகனம் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்குள்ளவர்களுக்கு சத்தான உணவு, மன நல மருத்துவர்களின் ஆலோசனை, யோகா பயிற்சி, உடற்பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த மையத்தில் பாதுகாவலர்கள், செவிலியர்கள், பராமரிப்பாளர்கள் என மொத்தம் 21 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரமோகன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments