Loading . . .




கிராமப்புறங்கள் வழியாக 21 கி.மீ. ஜாக்கிங் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

The Forecast 8 months ago கோவை

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டிடம் மற்றும் உபகரணங்கள்,ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் காரமடை வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் மற்றும் ரூ.22.75 லட்சம் மதிப்பீட்டில் இரட்டை வகை செவிலியர் குடியிருப்பு கட்டிடங்களை இன்று காலை 11 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்க உள்ளார்.  இதற்காக அவர் நேற்றிரவே மேட்டுப்பாளையத்திற்கு வந்திருந்தார்.

இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மேட்டுப்பாளையம் வந்த அவர் இன்று அதிகாலை 5 மணிக்கு காட்டூர் ரயில்வே கேட் அருகில் இருந்து தனது ஜாக்கிங்கை துவங்கினார்.பின்னர், அங்கிருந்து வனபத்ரகாளியம்மன் கோவில்,தேக்கம்பட்டி, தேவனாபுரம்,மேடூர், சாலை வேம்பு,கண்டியூர், வெள்ளியங்காடு வழியாக தோலம்பாளையம் சென்றார்.அப்போது, அப்பகுதி அவ்வழியாக உள்ள கிராமங்களின் நிலை,சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தபடியே சென்றார்.

திடீரென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்களது கிராமப்பகுதிகளில் ஜாக்கிங் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். அப்போது,அவ்வழியாக சென்ற கராத்தே பயிலும் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்தும் அவர் மகிழ்ந்தார். 

இந்நிகழ்வின் போது திமுக காரமடை ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரதீப், மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன்,மாவட்ட விவசாய அணி தலைவர் பத்திரசாமி,மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் திருவேங்கடசாமி,மாவட்ட சிறுபான்மையினர் அணி துணைத்தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News