அழுகிறவர்களோடு சேர்ந்து அழுவதா அதிகபட்ச ஆறுதல்..!
முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அவர்களின் இந்த பொன்னான வரிகள், மிகவும் ஆழமான கருத்தை மேற்கோள் காட்டுகிறது. ஒருவருக்கு அவரின் துயரத்தில் இணைத்து அழுகையை மட்டும் பகிர்வது அவருக்கு மிகுந்த ஆறுதலை வழங்குமா என்பதைக் பற்றி குறிப்பிடுகிறது.
ஒருவர் அழும்போது, அவருடன் நாம் சேர்ந்து அழுவது, அவரின் துயரத்தில் எங்களுக்கும் பங்குவுண்டு என்பதைக் காட்டுகிறது. இது அவருக்கு தனிமை உணர்வை நீக்கி, நாம் பக்கத்தில் நாம்மோடு நாம் தூயரதை புரிதுகொள்ள ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை வழங்கும்.
இருப்பினும், அவர்களின் பிரச்சினைகளை கேட்டு, எங்களால் முடிந்த வரை உங்களுக்கு உதவி செய்கிறேன், நான் உங்களுக்காக இருக்கிறேன், நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்ற ஆறுதலான வார்த்தைகள், அவர்களின் மனச்சோர்வைக் குறைக்கும். இதன்மூலம், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு இடத்தைப் பெறுகின்றனர். மேலும், அவர்கள் இப்படி ஒரு உறவு இருப்பதை தெரித்துகொண்டால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மேலும், தங்களோடு இருபவர்கள் உற்றாராய் இருபினும், உறவினராய் இருபினும் அல்லது நண்பர்களாய் இருபினும் தனக்கு ஒருவர் உண்டு என்ற நம்பிக்கை, அவர்களுக்கு பெரும் ஆதரவான உணர்வை அளிக்கிகும் என்பது உண்மை.
மேலும், மனம் சோர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களை நம்பிக்கையுடன் கையாள்வதன் மூலம், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராகவும், மன வலிமையுடன் இருக்கவும் உதவுகிறது. அதனால்தான், அழுகிறவர்களோடு சேர்ந்து அழுவது, உண்மையில் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தாலும் நான் உங்கள் அருகில் நான் இருக்கிறேன் என்ற ஆறுதலான வார்த்தைகள் மன ஆறுதலையும் , பிரச்சினைகளில் இருந்து மீண்டு எழும் சக்தியை அளிக்கிறது.
0 Comments