Loading . . .




சர்வதேச அளவிலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

The Forecast 1 month ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி,  கோவை மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக ஒண்டிப்புதூர், திறந்தவெளி சிறை மைதானத்தினை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி,  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News

Latest News