கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய நிகழ்வின், இதுவரை 11 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் : உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது
The Forecast 7 months ago கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய கோர நிகழ்வின், இதுவரை சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான தனிக்குழுவினர் 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 211 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில், நேற்று இரவு வரை 4 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 106 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் என 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 Comments