Loading . . .




குடிநீர் திட்டப்பணிகள் : மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் ஆய்வு மேற்கொண்டார்

The Forecast 2 years ago கோவை

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப.,  நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், கிழக்கு மண்டலம் வார்டு எண்.7க்குட்பட்ட நேரு நகர் பகுதியில் காளப்பட்டி – அம்ரூத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகளையும், வார்டு எண்.5க்குட்பட்ட விளாங்குறிச்சி, டி.நகர் பகுதியில்  மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி (அம்ரூத்) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சுமார் 2.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதியினையும் மற்றும் வார்டு எண்.8க்குட்பட்ட சிவா நகரில் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி (அம்ரூத்) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சுமார் 5.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், சீரான முறையில் உரிய கால இடைவெளியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், கிழக்கு மண்டலம் வார்டு எண்.24க்குட்பட்ட டைட்டல் பார்க், சேரன்மா நகர் செல்லும் வழியில் அமைந்துள்ள சாக்கடை கழிவுநீர் கால்வாயினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சாக்கடை கழிவுநீர் கால்வாயினை தூய்மைப்பணிகள் மேற்கொண்டு, கால்வாயினை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News