தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மூலம் அரசுப் பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Janani G 5 months ago பள்ளிக் கல்வித்துறை
அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் 50% பள்ளி மானியம் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகை, அடுத்த 3 நாள்களில் பள்ளி மேலாண்மை குழுவின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர், பள்ளி வளாகத்தில் சோப்பு, கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் வழங்க வேண்டும் என்ற முக்கிய உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழுவிற்கு பிறப்பித்துள்ளது.
0 Comments