தமிழகத்தில் அனைத்து பானிபூரி கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு!
Janani G 5 months ago தமிழ்நாடுபானிபூரி கடைகளில் ஆய்வு நடத்திய அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னையில் விற்கப்படும் பானிபூரிகளில், புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், பானிபூரி விற்கும் கடைகளில் ஆய்வு செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்துவரும் அதிகாரிகள், பானிபூரி மற்றும் அதன் மூலப் பொருட்களின் தரம் குறித்து சோதித்து வருகின்றனர்.
0 Comments