தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
The Forecast 7 months ago தமிழ்நாடு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
* தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இ.கா. ப., அமலாக்க பணியகம் சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஸ் அதிகாரி அபின் தினேஷ் இ.கா.ப., நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி கண்ணன் இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி இ.கா.ப., ஆயுதப்படை ஐஜியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னையில் காவல்துறை தலைவர் அலுவலக ஏடிஜிபியாக வெங்கட்ராமன் இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கடலோர காவல் படை ஏடிஜிபியாக சஞ்சய் குமார் இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ராஜீவ் குமார் இ.கா.ப., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மேலும், சிபிசிஐடி ஐஜியாக உள்ள டிஎஸ் அன்பு இ.கா.ப., விடம் கூடுதல் பொறுப்பாக சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 Comments