திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மாநகரின் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அதிகபட்சமாக 51 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் 178 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments