மும்பை கலினா பகுதியில், ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்காக ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், பரபரப்பு நிலவியது. தூய்மைப்பணி, பழுதுநீக்கம் போன்ற சுமார் 2,000 பணியிடங்களுக்கு, நேர்முக தேர்வுக்காக அவர்கள் படையெடுத்ததால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. அங்கு கூடிய கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். இறுதியில், விண்ணப்பங்களை பெட்டியில் போட்டுவிட்டு, இளைஞர்கள் திரும்பி சென்றனர்.
0 Comments