Loading . . .




​​தமிழகத்தின் புதிய , ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக, ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்றுள்ளார்

The Forecast 1 year ago ககன் சிங் பேடி இ.ஆ.ப

ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., தமிழகத்தின் திறமையான இந்திய அரசு ஊழியர், தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இவர் முன்பு தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக சிறந்த முறையில் மக்களுக்காக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில், அவர் நெருக்கடி மேலாண்மை மற்றும் நிவாரணப் பணிகளில், குறிப்பாக 2004 டிசம்பர் சுனாமி, 2015 வெள்ளம், மற்றும் 2018 தூத்துக்குடி வன்முறை போன்ற சம்பவங்களில் தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் நல்ல முறையில் செயலாற்றியுள்ளார்.

இவர் முன்னதாக, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது தமிழக்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தார். மேலும், தற்போது மீண்டும் அதே துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார். எனவே, இப்பதவியில் தனது திறமையையும் அனுபவத்தையும் பயன்படுத்தி, ஊரக வளர்ச்சிக்கான முயற்சிகளை மேலும் மேம்படுத்துவார் என நம்பப்படுகிறது.

ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., தனது பணித் திறமையால் மக்களிடையே ஒரு நம்பிக்கையான முகமாக உள்ளார். 1993 இல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் பணியாற்ற ஆரம்பித்தார். 1999 முதல் 2001 வரை மதுரை மாநகராட்சி ஆணையராகவும், 2001 முதல் 2003 வரை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றினார். 2003 முதல் 2007 வரை கடலூர் கலெக்டராக இருந்த காலத்தில் அவர் பல நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டார். 

அதைத் தொடர்ந்து, வருவாய் செயலாளராகவும், 2016 முதல் 2019 வரை, தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். மேலும், மே 2021 இல், தி கிரேட்டர் சென்னை (மாநகராட்சி) ஆணையராக பதவி ஏற்று, நகரின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் அதிக கவனம் செலுத்தி பணியாற்றினர்.

மேலும், அவர் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றியபொழுது தமிழகம் முழுவதும் மக்கள் எந்த முலை முடுக்கில் இருந்து உதவிகளை கேட்டாலும் அவர்களின் சூழ்நிலைகளை தெளிவாக அறிந்துகொண்டு  உடனுக்குடன் தீர்வு கண்டுபிடித்து துரிதமாகவும், மிக சாமர்த்தியமாகவும் செயல்படுவார் என மக்கள் பலர் பகிர்ந்துகொண்டனர். எனவே தற்போது, ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக, தன்னுடைய அனுபவமும் திறமையும் கொண்டு, தமிழகத்தின் ஊரக பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்தும் பணிகளை சிறப்பாக செயல்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.

0 Comments

Post your comment here

ககன் சிங் பேடி இ.ஆ.ப Relateted News