யோகிபாபு, ஏகன் இணைந்து நடித்துள்ள 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படம், அக்லேண்ட் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டு செப்.18ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. அமெரிக்காவில் 22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திரைப்பட விழாவில் இதுவரை எந்த தமிழ் படமும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 12 -21ஆம் தேதி வரை திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.
0 Comments