சமூக நீதி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
The Forecast 3 weeks ago சேலம்
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான இன்று சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று சமூக நீதி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ. ப, தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை ஒழிப்பு மற்றும் மத வேறுபாடுகளை ஒழித்து, பெண்களைச் சமநிலையில் மதித்து, அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக தனது கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளன்று ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மிலாது நபியை முன்னிட்டு, அரசு விடுமுறை என்பதால் நேற்றயதினம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில், துணை ஆட்சியர் (பயிற்சி) ஆர். மாருதிபிரியா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments