Tsuchinshan-ATLAS என்ற வால் நட்சத்திரம் வரும் வெள்ளி முதல் திங்கள் வரை வானத்தில் காட்சி அளிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் 80,000 ஆண்டுகளுக்கு பின் வானில் தோன்றவுள்ளது. தெளிவற்ற நட்சத்திரத்தை ஒத்திருக்கும் இதை அதிகாலை நேரங்களில் வெறும் கண்ணால் காணலாம். மேலும் , சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர் மேத்யூ எடுத்த அழகான வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
0 Comments