➤ சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,53,115 பேர் பயணித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 90,222 (5.1%) அதிகம்!
➤ ஒட்டுமொத்தமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுங்கச் சோதனை என்ற பெயரில் பயணிகளை பல மணி நேரம் விமான நிலையத்தில் காக்க வைப்பதே இதற்கு காரணம் என பயணிகள் குமுறல்.
➤ வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பலர், சென்னை விமான நிலையத்திற்கு வராமல், அருகே உள்ள பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்கு சென்று விட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை மார்க்கமாக சென்னை திரும்புகின்றனர்!
0 Comments