மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பது குறித்த மாநில பணிக்குழுவின் (State Level Task Force) முதல் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது
The Forecast 2 weeks ago தமிழ்நாடு
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பது குறித்த மாநில பணிக்குழுவின்(State Level Task Force) முதல் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான மாநில அளவிலான பணிக்குழு தொடர்பான ஆணை, 01.10.2024 நாளிட்ட அரசாணை (நிலை) எண் 289 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் வெளியிடப்பட்டது.
மகப்பேறு இறப்புக்கான காரணங்கள் மற்றும் இடங்களைப் புரிந்துகொள்வதில் மகப்பேறு இறப்பு தணிக்கை கருவியாக இருந்தாலும், மாநிலத்தின் கவனம் தற்போது உயிர்களைக் காப்பதில் திரும்பியுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள், குறித்த நேரத்தில் தலையீடுகள் மற்றும் அனைத்து பெண்களுக்கும் கர்ப்பம் மற்றும் மகப்பேறு காலம் முழுவதும் தேவையான கவனிப்பை உறுதி செய்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மேலும், இக்கூட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாட்டின் மகப்பேறு இறப்பு விகித அளவை 10-க்கும் கீழ் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பணிக்குழு உறுதியளித்தது.
இக்கூட்டத்தில்,தேசிய நலவாழ்வு குழுமத்தின் இயக்குநர் ஷில்பா பிரபாகர் இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன் இ.ஆ.ப., சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹு இ.ஆ.ப., டாக்டர் ஜெ. சங்குமணி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர், டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், டாக்டர் தி.சி. செல்வவிநாயகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், டாக்டர் அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார திட்டம், இந்திய மருத்துவ சங்கம், கிருத்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர், இராஜா சர் இராமசாமி முதலியார் மருத்துவமனை, கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை, தென்னிந்திய மகப்பேறு மருத்துவ சங்கம், உலக சுகாதார அமைப்பு மற்றும் அஸ்வினி அரசு சாரா அமைப்பு, கூடலூர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 Comments