
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இ.ஆ.ப.,வுக்கு சமீபத்தில், பால்வளம், மீன்வளம், கால்நடை பராரிப்புத்துறை செயலர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிப்பதற்கான 3 பேர் அடங்கிய பட்டியலை அனுப்பும் படி, தமிழக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கோரியது. இதையடுத்து, தமிழக பொதுத்துறை, 3 அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை தயாரித்து அனுப்பியுள்ளது. இதில், பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா இ.ஆ.ப., தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டான்சிட்கோ) தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப., மற்றும் மூத்த அதிகாரி ஒருவர் பெயரும் இடம் பெற்றுள்ளது. வரும் அக்.29ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்க உள்ள நிலையில், விரைவில் புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என தேர்தல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments