அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு 50 மாகாணங்களிலும் அமெரிக்க மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்
The Forecast 1 month ago உலக செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார்.
தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகின்றனர். ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ஃப்ளோரிடா மாகாணத்தில் தனது வாக்கை செலுத்தினார். மேலும், 50 மாகாணங்களிலும் அமெரிக்க மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். சுமார் 95 சதவீத இடங்களில் வாக்குச்சீட்டு நடைமுறையிலும், மீதமுள்ள 5 சதவீத இடங்களில் மின்னணு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே 8.2 கோடி பேர் வாக்களித்துவிட்டனர். அதாவது 40 சதவீதம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments