கடலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
The Forecast 1 year ago கடலூர்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கடலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஜயப்பன், சபா.இராஜேந்திரன், எம்.ஆர்.இராதா கிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க.நந்தகுமார், இ.ஆ.ப., தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி.அ. ராமன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments