தலைமைச் செயலாளரின் மூளைக்குள் சுற்றுலா நூலுக்கு பரிசு: பரிசை தவிர்த்து முன் உதாரணமாக திகழும் Dr.வி. இறையன்பு இ.ஆ.ப.
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
தமிழக அரசின் தலைமை செயலாளர் வி.இறையன்பு இ.ஆ.ப. தான் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கான தமிழக அரசின் பரிசை தவிா்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 2018-ம் ஆண்டு வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று, தெரிவுக் குழுவால் சில நூல்கள் தோ்வு செய்யப்பட்டன.
அதில், எனது நூலான ‘மூளைக்குள் சுற்றுலா’ தெரிவு செய்யப்பட்டு அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளேன். இதற்கு மனமாா்ந்த நன்றியை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவில் தலைமைச் செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையது அல்ல. எனவே, எனது படைப்புக்கு வழங்கப்படும் பரிசை தவிா்க்க வேண்டும். இவ்வாறு தலைமைச் செயலாளா் வி.இறையன்பு இ.ஆ.ப. கூறியுள்ளார்.
இவரின் இத்தகைய பண்பு பலராலும் பாராட்டு பெற்றுள்ளது. இவரது மூளைக்குள் சுற்றுலா நூல் பலராலும் பாராட்டு பெற்றுள்ளது. எழுத்தாளராக பல நூல்களை வி.இறையன்பு இ.ஆ.ப. எழுதியுள்ளார். அதில் மிக முக்கியமான நூலாக இந்நூல் பார்க்கப்படுகிறது. காரணம், மனிதன் இயக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் மூளை தொடர்பாக பலரும் அறியாத விசியங்களை அறிவியல் ரீதியாக குழந்தைகளுக்கு கூட புரியுமாறு எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல மூளை - உடல் மட்டுமல்லாமல் பல வரலாற்று விவரங்களையும் இந்நூலில் எழுதியுள்ளார்.
0 Comments