சென்னையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது
Janani G 2 weeks ago தமிழ்நாடு
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது. மேலும் இந்த 5 அடுக்கு பாதுகாப்பு, வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை நடைமுறையில் இருக்கும். இதையடுத்து , வரும் 24, 25, 26 ஆகிய 3 நாட்களில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments