Loading . . .




மும்பை முதல் அகமதாபாத் வரை புல்லட் ரயில் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது

The Forecast 2 weeks ago மின்னணு தேடல்

ஜப்பானிலிருந்து புல்லட் ரயில் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக தாமதம் ஏற்படுவதால், மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சூரத் - பிலிமோரா இடையே அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் ஜப்பானின் ஷிங்கன்சென் புல்லட் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால் புல்லட் ரயில் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை, இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜப்பானின் புல்லட் ரயில்கள் 2030-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியா வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 2033-ம் ஆண்டில் ஜப்பானின் புல்லட் ரயில்கள் இந்தியா வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News