Loading . . .




பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்தில், தகவல் தொழில்நுட்பம், சிவில் அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது 

The Forecast 1 year ago உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானும் தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இரு தரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தியா - பிரான்ஸ் கூட்டாண்மையின் அனைத்து அம்சங்களையும் இந்தப் பேச்சுவார்த்தைகள் உள்ளடக்கியிருந்தன. பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, விண்வெளி ஆகிய முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளையும் அவர்கள் விவாதித்தனர்.

மேலும் சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுலா, கல்வி மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகிய துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் மெக்ரானும் திருப்தி தெரிவித்தனர். இந்தோ - பசிபிக் மற்றும் உலகளாவிய மன்றங்கள் மற்றும் முன்முயற்சிகளில் ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்த அவர்கள் உறுதியளித்தனர்.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News